சந்தானம் பட பாடல் சர்ச்சை : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ் | ''கெட்ட பழக்கங்களை விட்டு 5 வருஷமாச்சு'': விஷால் விளக்கம் | தமன்னாவை மறந்த தமிழ் சினிமா | பாதுகாப்பு கேட்டு கவுதமி போலீசில் புகார் | எழுத்தாளராக சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி | விஜய் ஆண்டனிக்கு மார்கன் கை கொடுக்குமா? | கை விடப்பபடுகிறதா இளையராஜா வாழ்க்கை வரலாறு | பிளாஷ்பேக்: தணிக்கையில் சிக்கிய மோகன் படம் | பிளாஷ்பேக்: லைலா - மஜ்னு: டப்பிங்கில் வெற்றி, ரீமேக்கில் தோல்வி | காதலருடன் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியிட்ட சமந்தா |
தமிழில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் தெறி. இந்த படம் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இயக்குனர் அட்லியே தயாரிக்கும் இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்கள். வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பேபி ஜான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் இயக்குனர் அட்லி ஆகிய இருவரும் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அட்லி இயக்கும் அடுத்த படத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பதால் நட்பு அடிப்படையில் இந்த பேபி ஜான் படத்தில் அவர் நடித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.