என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழில் தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். தற்போது பாஜக சார்பில் தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சார்ந்த விஜய் வடேட்டிவார் என்பவர், தனது எக்ஸ் பக்கத்தில், கங்கனா மாட்டிறைச்சியை விரும்புவதாகவும், அதை சாப்பிடுவதாகவும் பதிவிட்டதற்கு ஒரு பதிலடி கொடுத்து இருக்கிறார் கங்கனா.
அதில், நான் மாட்டிறைச்சி மட்டுமின்றி வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சிகளையும் சாப்பிடுவதில்லை. என்னை பற்றி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறார்கள். பல தசாப்தங்களாக யோகா மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறேன். அதனால் நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக எனது இமேஜ் யாராலும் கெடுக்க முடியாது. நான் ஒரு பெருமைமிக்க இந்து என்பது அனைவருக்கும் தெரியும். ஜெய் ஸ்ரீ ராம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் கங்கனா.