சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்சி. கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி டெலிவிஷன் நடிகை மரியா கோரட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜீக் என்ற மகனும், ஜெனி ஜோ என்ற மகளும் உள்ளனர். தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அர்ஷத் வர்சி கூறும்போது, “காதல் நிறைந்த எங்கள் வாழ்க்கையில் பதிவு திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் தற்போது அதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். சொத்து விஷயங்கள், வெளிநாட்டு பயணங்கள் போன்றவற்றில் பதிவு திருமணம் அவசியமானதை அறிந்துள்ளோம். அதேவேளை எங்கள் திருமணத்தை சட்டரீதியாகவும் பதிவு செய்ய விரும்பினோம். எனவே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது காதலர் தினத்தையொட்டி எங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளோம்'' என்றார்.
“அர்ஷத்தை மீண்டும் திருமணம் செய்து கொண்டேன்” என்கிறார் மரியா. தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.