காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
ஹிந்தித் திரையுலகத்தில் 1960, 70களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் தேவ் ஆனந்த். அவருக்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. 2011ம் ஆண்டு தனது 88வது வயதில் மறைந்தார்.
பாலிவுட்டில் இருக்கும் பல நடிகர்களிலும் பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுவது வழக்கம். பிரம்மாண்ட வீடுகளை வாங்குவது, தொழில்களில் ஈடுபடுவது என செய்வார்கள். தேவ் ஆனந்த் உச்சத்தில் இருந்த போது மும்பையின் பல பகுதிகளில் வீடுகளை வாங்கியவர்.
அப்படி அவர் வாங்கிய, மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பங்களா 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் அந்த பங்களாவை பிரபல ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றிற்கு விற்றுள்ளார்களாம். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி பணமும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அந்த இடத்தில் 28 மாடியில் பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை கட்டப் போகிறார்களாம்.
தமிழ் சினிமாவிலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளவர்கள்தான்.