நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடித்து ராமாயணத்தைத் தழுவி எடுத்த 'ஆதி புருஷ்' படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பெற்றது. நாம் இதற்கு முன் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் பார்த்த ராமாயணத்திற்கும் 'ஆதி புருஷ்' படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அந்தக் காவியத்தின் உண்மைத் தன்மையை படக்குழுவினர் கெடுத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஹிந்தியில் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் மற்றும் பலர் நடிக்க ராமாயணக் காவியத்தை அப்படியே படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தக் காவியத்தின் தன்மை சிறிதும் குலையாமல் அந்தப் பழமையுடனும், கலாச்சாரத்துடனும் படமாக்கவே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்தையும் முன்கூட்டியே சரியாகத் திட்டமிட்டு படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.
விரைவில் படக்குழுவினர் டெஸ்ட் ஷுட் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம். அதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் ஷுட்டிற்காகவே மும்பையில் தனியாக ஒரு அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். டெஸ்ட் ஷுட் முடிந்து அது திருப்தியான பிறகே அடுத்த கட்ட அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்கிறார்கள். பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இந்த 'ராமாயணம்' உருவாக உள்ளது.