'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
அக்ஷய்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ஓஎம்ஜி (ஓ மை காட்) 2. அக்ஷய்குமாருடன் யாமி கவுதம், பங்கஜ் திரிபாதி, அருண் கோவ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அமித் ராய் இயக்கி உள்ளார். வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்தை மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பும்படி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தை மறு தணிக்கைக்கு மேல் முறையீடு செய்கிறது தயாரிப்பு நிறுவனம். அங்கு சில கட்டுகளுடன் சான்றிதழ் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. படத்தில் அக்ஷய்குமார் சிவன் வேடத்தில் நடித்திருக்கும் சில காட்சிகள் பக்தர்கள் மனதை புண்படுத்தலாம் என்பதால் தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.