தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

'மிஷன் மங்கல்' படத்திற்கு பிறகு வித்யாபாலன் நடிக்கும் புதிய படம் 'நீயத்'. இப்படத்தை அனுமேனன் இயக்கி உள்ளார். 'சகுந்தலா தேவி' படத்துக்குப் பிறகு அனுப் மேனனும் - வித்யாபாலனும் மீண்டும் இப்படத்துக்காக இணைந்துள்ளனர். ராம் கபூர், ராகுல் போஸ், நீரஜ் கபி, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஓடிடி தளத்திற்காக தயாரித்தனர். ஆனால் தற்போது படம் நன்றாக வந்திருப்பதால் படத்தை தியேட்டரில் வெளியிட்டுவிட்டு பின்னர் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற ஜூலை 7ம் தேதி படம் தியேட்டரில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது. படத்தில் மீரா ராவ் என்ற துப்பறியும் நிபுணர் கேரக்டரில் வித்யாபாலன் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லராக படம் தயாராகி உள்ளது.