சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கடந்த 2018-ம் ஆண்டில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்த ஆந்தாலஜி சீரியஸ் லஸ்ட் ஸ்டோரிஸ். இதில் ராதிகா ஆப்தே, மணிஷா கொய்ராலா, க்யாரா அத்வானி, புமி பட்னேகர், விக்கி கவுசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூன் 29-ம் தேதி அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த தொடரில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த தொடரின் டீசர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.