'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
பெங்களூருவைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்தவாறே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் சுகேஷுக்கு உதவியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஏற்கெனவே ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன் நோரா பதேகிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சுகேஷிடம் பரிசு பொருள், பணம் பெற்றது உண்மைதான். ஆனால் அவர் மோசடி நபர் என்று அப்போது தனக்கு தெரியாது என்று நோரா விசாரணையில் தெரிவித்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.