பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் 'தேங்க் காட்'. வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. சமீபத்தில் சித்ரகுப்தன் சர்சையை ஏற்படுத்திய படம். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அடுத்து கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கும்போது விபத்தில் மரணமடைந்து விடுகிறார். விண்ணுலகம் செல்லும் அவருக்கு சித்ரகுப்தன் வாழ்க்கையை புரிய வைப்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் இந்திரகுமார் இந்த கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்த கதை வாழ்க்கையை புரிய வைத்தது.
எனக்கு போலீஸ் வேடம் என்றதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் உயரம் போலீஸ் கேரக்டருக்கு சரியாக இருக்கும், ஆனால் உடற்கட்டு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு மேல் யோசிக்காமல் இயக்குனரிடம் என்னை ஒப்படைத்து விட்டேன். அவர் என்னை திரையில் அற்புதமாக உருவாக்கினார். இப்போது இதுபோன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.