10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

ஹிந்தியில் குட்பை, உஜ்சாய் மற்றும் ப்ராஜெக்ட் கே என பல படங்களில் தற்போது நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அதோடு மிகவும் பிரபலமான தொலைக்காட்சி கேம் நிகழ்ச்சியான குரோர்பதியின் புதிய சீசன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இப்படி பிசியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறார் அமிதாபச்சன். அந்த செய்தியில், நான் இப்போது கோவிட் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறேன். அதனால் என் அருகாமையிலும் என்னைச் சுற்றிலும் இருந்த அனைவரும் தயவு செய்து உங்களை பரிசோதித்துக் கொள்ளவும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.