Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கங்கனா ரணவத் படத்தால் ரூ.70 கோடி நஷ்டம்

15 ஜூன், 2022 - 11:42 IST
எழுத்தின் அளவு:
kangana-ranaut-dhaakad-movie-:-Rs.70-crore-loss

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிககைளில் ஒருவர் கங்கனா ரணாவத். அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கருத்துக்களைச் சொல்லி மீடியாவின் வெளிச்சத்திலேயே இருப்பவர். கங்கனா கதாநாயகியாக நடித்த 'தக்கட்' என்ற ஹிந்திப் படம் கடந்த மே மாதம் 20ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெறும் 3 கோடியை மட்டுமே வசூலித்து பாலிவுட்டிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தியேட்டர்களில் மக்கள் வராததால் படம் வெளியான சில நாட்களிலேயே பல ஊர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

படத்தின் பட்ஜெட்டுடன் சேர்த்து புரமோஷனுக்காக மேலும் ஒரு 10 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். அதனால் மொத்தமாக 80 கோடி ரூபாய் வரை படத்திற்கு செலவாகியுள்ளது. படம் படுதோல்வி அடைந்ததால் ஓடிடி, சாட்டிலைட் உரிமைகளையும் பெரிய விலைக்கு விற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவற்றின் உரிமை சுமார் 5 கோடி வரை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர் வசூல், ஓடிடி உரிமை, சாட்டிலைட் ஆகியவை நீங்கலாக இந்தப் படம் எப்படியும் 70 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த படங்களில் இந்த அளவிற்கு நஷ்டத்தைக் கொடுத்த படம் இதுதான் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பில் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சு வலிபடப்பிடிப்பில் நடிகை தீபிகா ... ஓடிடியில் வெளியாகும் கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக் ஓடிடியில் வெளியாகும் கோலமாவு கோகிலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

chakra - plano,யூ.எஸ்.ஏ
15 ஜூன், 2022 - 18:03 Report Abuse
chakra படிக்காத பைத்தியம் படத்தில் நடித்தால் என்ன ஆகும்
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17 ஜூன், 2022 - 11:18Report Abuse
pradeesh parthasarathyஎன்ன அப்படி சொல்லிப்புட்டீங்க... பிஜேபி யின் வருங்கால தேசிய தலைவர். மற்றொரு ஸ்ம்ரிதி இராணி ... பிஜேபி இப்படி தானே தலைவர்களை உருவாக்குகிறது ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in