கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
மும்பையை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், 18லிருந்து 25 வயதுக்குள் இந்திய அணிக்காக அறிமுகமாவிடுவார்கள். ஆனால் பிரவீன் தாம்பேவின் அறிமுகம் வித்தியாசமானது. கிரிக்கெட் மீது கொண்ட காதலால் தொடர்ந்து போராடி தனது 41வது வயதில் ஐபிஎல் போட்டியில் நுழைந்து, சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார்.
அவரின் கிரிக்கெட் போராட்டத்தை மையமாக வைத்து 'கெளன் பிரவீன் தாம்பே?' என்ற பெயரில் ஹிந்தியில் சினிமாவாகி உள்ளது. தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்திருக்கிறார். இதில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டீல் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழில், 'யார் பிரவீன் தாம்பே?' என்ற பெயரில் வெளியாகிறது.