வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கிராமிய கலைஞனாக இருந்து கச்சேரிகளில் பாடகராகி, சொந்தமாக பாடல்களை எழுதி பாடியவர். சினிமாவில் 'திண்டுக்கல் சாரதியில்' அறிமுகமாகி பட்டித்தொட்டி எங்கும் கலக்கும் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற பன்முகத்தன்மை பெற்ற அந்தோணி தாசன் நம்முடன் பகிர்ந்தது...
அந்தோணி பெயருடன் நானே சேர்த்து வைத்துக்கொண்டது தாசன். சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். தஞ்சாவூருக்கு பெற்றோர் குடியேறியதால் தஞ்சை அடையாளமாக மாறியது. தந்தை நாதஸ்வர கலைஞர் என்பதால், அவரிடம் நாதஸ்வரம் வாசிப்பதை கற்றுக்கொண்டேன்.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, 10 வயது முதல் கல்யாணம், காது குத்து விழாக்களில் தாளம் வாசிக்க சென்றதில் கலைப்பயணம் துவங்கியது. உருமி, பறை உள்பட பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்க கற்றேன்.
கரகாட்டம் கற்றேன். சொந்தமாக பாடல்கள் எழுதி பாடினேன். கச்சேரிகளில் பாடத் துவங்கிய போது சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. சூது கவ்வும், மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல்வேறு படங்களில் பாடியுள்ளேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி, ஆங்கிலத்தில் பாடல் பாடி வருகிறேன்.
மற்ற மொழி பாடல்களை பாடும் போது தமிழ் மொழியில் பாடல் வரிகளை கேட்டு எழுதி பாடுவதாலும், பிழை இருந்தால் திருத்திக்கொள்வதால் மொழி தெரியாமல் இருந்தும் பிற மொழி பாடல்களை பாட முடிகிறது.
இசையமைப்பாளர்கள் எந்த மாதிரி பாடல் என இசையாக காட்டும் போது அப்பாடலுக்கு ஏற்றது போல பாடுகிறேன். இசையை கேட்டறிந்த கேள்வி ஞானத்தில் கற்றுக்கொண்டு தற்போது வைரி, எம்.ஜி.ஆர்., மகன், குய்கோ, அம்பு நாடு ஒம்பது குப்பம் உட்பட 5 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.
எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க முடியாத பட்சத்தில் மற்றவர்கள் உதவியை நாடுவேன். இசையமைக்கும் போது ரசிகனாக வேலை செய்வதால் சிறப்பாக பணி செய்ய முடிகிறது.
சொந்தமாக 'அந்தோணியின் பாட்டு' என்ற 'இண்டிபெண்டன்ட் பேண்ட்' வைத்து நடத்தி வருகிறேன். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், இளையராஜா வாழ்க்கை வரலாற்றை பாடலாக பாடியது மறக்க முடியாத அனுபவம்.
திறமையான கிராமியக் கலைஞர்களை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வழிகாட்டுதல்கள் இல்லை. சமூக வலைதளங்கள் கலைஞர்களுக்கு வழிகாட்டுதலை அளிக்க வேண்டும். திறமையானவர்களுக்கு பொருளாதார உதவி அளித்து, பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கல்வி, தொழில் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், திருவிழா, மக்களுக்கான நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து விழாக்களிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவபதே லட்சியம் என்றார்.




