ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
மலையாள 'பிரேமத்தில்' மனதில் நின்று, பா.பாண்டியில் பரவசப்படுத்தி, லியோவில் ஜொலித்து ரசிகர்கள் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவர் மடோனா செபாஸ்டின். இப்போது 'ஜாலியோ ஜிம்கானா' படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வர இருக்கிறார். மடோனா நமக்கு அளித்த பேட்டி...
ரொம்ப நாள் கழித்து ஒரு காமெடி படத்தில் நடித்துள்ளீர்களே..
ஆமாம். ஜாலியோ ஜிம்கானா ஜாலியான படம். பல ஆர்டிஸ்ட் இந்த படத்துல இருக்காங்க. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நீங்களும் சிரிச்சு ரசிச்சிட்டு தியேட்டரில் இருந்து வருவீங்க.. அவ்ளோ காமெடி.
பிரபுதேவா கூட நடித்த அனுபவம்?
எந்த தொந்தரவும் இல்லாத இனிமை மனிதன் பிரபுதேவா. படம் முழுக்க அவரை குழந்தை போல துாக்கிட்டு அலையிறோம். மத்தது நீங்க படத்தில் தான் பார்க்கணும்..
சில படங்கள் நடிச்சீங்க; அப்புறம் சின்ன இடைவெளி கொடுத்தீங்க. எப்படி ஒரு படத்தை தேர்வு செய்றீங்க?
படத்துக்குன்னு என்னோட பங்களிப்பு ஏதாச்சும் கண்டிப்பா இருக்கணும். நல்ல கதை, நல்ல இயக்குனர். இது தான் எதிர்பார்க்கிறேன். அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புவது இல்லை.
சாய் பல்லவியும் நீங்களும் பிரேமம் படத்தில் அறிமுகம் ஆனீங்க. இப்ப அமரன் படத்தில் சாய் பல்லவி நடிப்பை எல்லாரும் கொண்டாடுவது எப்படி இருக்கு?
ஒரு நடிகையா அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. அவர் வளர்ச்சியைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நல்லா பாடுவீங்க; பிரபுதேவா படத்தில் ஒரு பாட்டு பாடி இருக்கலாமே?
படத்துல ஒரு பாட்டு நான் பாடுவதாக இருந்தது. நேரம் கிடைக்காமல் வேறு ஒரு பாடகி பாடினாங்க. கண்டிப்பா நீங்க நடிப்புல தான் கவனம் செலுத்த வேண்டும் என்று இயக்குனர் சொல்லி விட்டார்.
விஜய், விஜய் சேதுபதி, தனுஷிடம் நீங்க கற்றுக்கொண்ட விஷயம் என்ன?
விஜய் சேதுபதி எப்படி எல்லோரிடமும் அன்பா பேசுகிறார், செல்பி எடுக்கிறார் என கத்துக்கிட்டேன். விஜய் டான்ஸ் இயல்பா ஆடுறாரு, சண்டை காட்சியில் அதிவேகமாக நடிக்கிறார் என்று ஆச்சரியமாக பார்ப்பேன். தனுஷோட முதல் இயக்கம் 'பா.பாண்டி' படத்தில் நடித்தேன். நடிகர், இயக்குனர் தனுஷா அவரை பார்த்து வியந்தேன்.
ஓய்வு நேரத்தை எப்படி செலவிடுவீர்கள்?
கொஞ்சம் பாடுவது, கொஞ்சம் பாக்ஸிங் கற்றுக் கொள்கிறேன். ஏதாவது தனித்திறனை தெரிந்து வைத்திருப்பேன். அது தான் எனக்கு 'லியோ' திரைப்படம் வரை பயன்பட்டது.
விஜய் கூட நடித்து இருக்கீங்க. அவர் அரசியலுக்கு வந்தது பற்றி உங்கள் கருத்து?
ரொம்ப தைரியமான முடிவு என நினைக்கிறேன். அரசியல் பெரிய விஷயம். அதனை அவர் கையில் எடுத்து இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.