தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : சம்ரிதி தாரா | மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்' | அக்டோபர் 25ல் வெளிவரும் 'வெனம்' கடைசி பாகம் | பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் |
'ஆலமர நிழலில் இளைப்பாறும் போது அண்ணாந்து பார்த்தால் இலைகள் வெளிச்சத்தை மறைத்து ஒளியானது கீற்றாக தான் தெரியும். சிறுவயதில் இருந்தே தாயுடன் முரண்பாடு செய்தே வளர்ந்தவள் நான். ஒவ்வொரு முரணிலும் என் விருப்பத்தை புரிந்து கொண்டு வெளியுலகில் என்னை வெளிச்சமிட வைத்த என் தாயின் அன்பை புரிந்து கொண்ட தருணங்கள் அற்புதமானது,'' என்கிறார் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுமயா கவுசர்.
செல்ல மகளாய் சிந்தை குளிரவைத்த தாயைப் பற்றி அவர் கூறியது: நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். இப்படித்தான் வாழ வேண்டும்; வளரவேண்டும் என அம்மா சுரையா ஜபின் கட்டுப்பாடுகளை சொல்லிக் கொண்டே இருப்பார். ஏன் இப்படி இருக்க வேண்டும் என கேள்வி கேட்பேன். 'பதில் தெரியாது, ஆனால் மீறக்கூடாது' என்பார். அம்மா சொல்லும் ஒவ்வொரு கட்டுப்பாட்டுக்கும் காரணம் கேட்டு கேட்டு எனக்கும் அம்மாவுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருந்தன. இரண்டு அக்காவையும் வெளியூரில் படிக்க வைத்த அம்மாவிடம் நான் சென்னையில் இன்ஜினியரிங் படிக்கிறேன் என்ற போது ஏற்கவில்லை. கடைசியில் எனக்காக விட்டுக் கொடுத்தார்.
சென்னையில் எனக்கு பிடித்த பி.டெக் ஐ.டி., படிக்க அனுமதி தந்தார். கல்லுாரி இறுதியாண்டில் வெளியூர்களில் வேலை கிடைத்தது. ஆனால் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. டிவி நிகழ்ச்சி ஆடிஷனுக்கு செல்ல விரும்பினேன். என் விருப்பத்தை மதித்த அம்மா என்னுடன் ஆடிஷனுக்கு வந்தார். தேர்வான பின் சூட்டிங்கிலும் கலந்து கொண்டார். பின் எந்த தடையும் சொல்லவில்லை.
அம்மா பியூட்டிசியன் என்பதால் 2 மாதங்களுக்கு ஒருமுறை அவரே 'பேசியல், ப்ளீச்சிங்' செய்து விடுவார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, தயாரிப்பாளராக இருந்தாலும் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் நெறியாளராக வெளியில் செல்வதுண்டு. எவ்வளவு வேலை இருந்தாலும் அம்மா என்னுடன் துணையாக வருவார்.
வாழ்க்கைக்கான நல்ல துணையையும் ஏற்படுத்தி கொடுத்தார். தற்போது கணவர், மாமியார் உற்சாகப்படுத்துவதால் பொதுவெளியில் என்னால் சாதிக்க முடிகிறது. அதற்கான அடித்தளம் அம்மா என்னிடம் காட்டிய முரண் தான் என்றார்.