'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட சித்தார்த், நடிப்பின் நுணுக்கங்களை சென்னையில் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்டவர். நடிகர் அருண்பாண்டியன் தயாரித்த படங்களுக்கு அசோசியேட்டாக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தில், தோன்றும் கனவை மனதில் கருவாக்கி வெள்ளித்திரையில் தன்னை தயார்படுத்த தொடங்கி அதில் வெற்றி கண்ட அவரை சந்தித்தபோது முதல் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
‛‛கொரோனா காலத்தில் ஒரு கதையை உருவாக்கி இயக்குநர் சுனில் தேவிடம் ஆலோசித்தேன். பலநாட்கள் விவாதம் நடந்தது. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களை துாக்கி உயர்த்திவிடும் ஓ.டி.டி தளத்தை நம்பியே உருவாக்கப்பட்டது 'அதோ முகம்' என்ற என் முதல்படம்.
திரைத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பு பிரிவில் வேலை செய்த அனுபவத்தில் இந்த சிறிய பட்ஜெட் படத்திற்கு முயற்சி செய்தேன். ஆனால் நடிப்பு எவ்வளவு கடினம் என்பதையும் என்னால் உணர முடிந்தது. கணவன், மனைவி மீது அன்பை வெளிப்படுத்த செய்யும் முயற்சியில் நடக்கும் விபரீதங்களே படத்தைக் கொண்டு செல்லும். பலரும் படத்தை அருமையாக அனுபவம் உள்ளவர்களால் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது என பாராட்டினர்.
அனைவரும் புதுமுகங்கள், ஒரு சில படங்களில் நடித்த துணை நடிகர்களை வைத்து படத்தை முடித்தோம். எங்களை ஊக்கப்படுத்த அருண்பாண்டியன் ஒரு சில காட்சியில் வருவார். சஸ்பென்ஸ், திரில்லிங் இதை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டது. நண்பர்கள் சிலர் பணம் கொடுத்து உதவினர்.
இன்றைய காலத்தில் ஒரு படத்தை இரண்டரை கோடி பட்ஜெட்டில் எடுத்து தியேட்டரில் திரையிடுவது இயலாத காரியம். மலையாளத்தில் வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இதில் கற்றுக்கொண்ட பாடம், படத்தை வெளியிடும் போது போட்டியாக வெளிவரும் படங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.
எங்கள் படத்தின் மலையாள மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. எனது நடிப்பில் அடுத்த படமும் ஒப்பந்தமாகியுள்ளது மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.