''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இளசுகளின் இதயங்களை உடைக்கும் கடைக்கண் பார்வை... அந்த பிரம்மனின் படைப்பில் பளிச்சிடும் அழகின் கோர்வை... விரியம் வழிகளில் வழியும்கனவு, நெளியும் நடையில் இல் லாத இடையில் இறங்கும் நிலவு... என அழகில் வியக்க வைக் கும் நடிகை ஷாதிகா மனம் திறக்கிறார்...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாதிகாவா
ஆமா... தமிழ் சீரியல், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க அறிமுகமான உங்கள் ஷாதிகா தான்ங்க இப்போ வளர்ந்த நட்சத்திரமாக நடிச்சிட்டு இருக்கேன். என் நடிப்பு பயணத்தை பள்ளிக்கு முன், கல்லுாரிக்கு பின் என பிரிக்கலாம்.
குழந்தை, பெரிய நட்சத்திரமாக நடித்த படங்கள்
பள்ளி நாட்களில் "மங்கை' என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். தொடர்ந்து 'வீரநடை', 'ரோஜாவனம்', 'மாசிலா மணி”, 'நான் மகான் அல்ல' படங்களில் நடித்தேன். கல்லுாரிக்குபின் ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு, இன்னொரு பேரு இருக்கு, மாவீரன் கிட்டு, 'நெஞ்சில் துணிவு இருந்தால்', சமீபத்தில் ரிலீஸ் ஆன 'பன்னிக்குட்டி' வரை நடிச்சிருக்கேன்
பெரியளவில் பேசப்பட்ட கேரக்டர்கள் என்னென்ன
மம்மூட்டி நடித்த 'ஆனந்தம்' படத்தில் முரளி, ரம்பாவுக்கு குழந்தையாக நடித்த கேரக்டர், 'நான் மகான் அல்ல' படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடித்த கேரக்டர் இப்போ வரைமக்கள் மனதில் நீங்காத இடம் பிடிச்சிருக்கு. எங்கே போனாலும் இந்த கேரக்டர்கள் குறித்து பாராட்டி பேசிடுவாங்க.
பிட்நஸ் ரகசியம்... அணிய பிடிக்கும் ஆடைகள்
ஓரளவு குண்டா இருந்து இப்போ வெயிட் குறைச்சிருக்கேன். நடிகையாக இருப்பதால் உடம்பை நல்லா வைச்சுகிட்டா அதுவே நம்பிக்கை தரும். பொண்ணுங்க தாவணி கட்டினாலே அழகு தான். எனக்கு தாவணி தான் அடிக்கடி அணிய பிடிக்கும்.
இளம் நட்சத்திரமாக நீங்கள் விரும்பும் கேரக்டர் என்ன
நடித்தால் ஹீரோயினா தான் நடிப்பேனு சொல்ல மாட்டேன். 5 நிமிட கேரக்டராக இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கணும். நம்ம படத்தில் இருக்கோம், நம்மளை சுற்றிவெயிட்டான கதை நகருதுனு அடையாளம் காட்டும் அளவுக்கு கேரக்டர் வந்தால் போதும். நல்ல வாய்ப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் ஓ.கே...
நடிப்பை தாண்டி 'டப்பிங் ஆர் டிஸ்டா' இருக்கீங்க போல
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே எனக்கு நானே டப் பிங் பேசுவேன். மறைந்த நடிகர், இயக்குனரான மனோ பாலா 'அன்னை' என்ற ஒரு படம் செய்யும் போது பேச வைத்தார். இயக்குனர் கண்ணன் உதவிகரமாக இருந்தார். 'சிகப்பு பச்சை மஞ்சள்'ல் காஷ்மீராவுக்கு, 'காஞ்சான தமிழ், தெலுங்கில் ஓவியாவுக்கு பேசினேன். மாற்று மொழி படங்களுக்கும் பேசுறேன்.
நடிப்பு, டப்பிங்,..டபுள் டிராக் டிராவல் எப்படி கஷ்டமா
கஷ்டம் இல்லை...கலைகளை நேசிக்க பழகிட்டா அடுத்தடுத்த டிராக்கில் டிராவல் பண்ணிட்டே இருக்கலாம். சினிமாவில் மட்டும் இப்படி, அப்படினு பிளான் செய்ய மூடியாது. ஆனால், சினிமா சில நேரங்களில் நமக்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்துகிட்டே இருக்கும்.
சீரியல், சினிமா எதில் அதிகமான ரீச் கிடைக்கும்
சீரியல் உடனே ரீச் ஆகும். ஆனால்,சினிமாவில் மொத்த நடிப்பு திறமைகளையும் வெளிப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கு. அதனால், சினிமா நடிப்பு தான் காலமெல்லாம் ரீச் ஆகிட்டே இருக்கும். அதற்காக தான் சூப்பரான கதையுள்ள படங்களுக்காக காத்திருக்கிறேன்.