மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
சினிமா நடிகை டெல்னா டேவிஸ் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் அன்பே வா தொடரில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஸ்ரீகோபிகா என்ற இரண்டாவது நாயகியை சீரியலுக்குள் அறிமுகப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை திரைக்கதையில் அதிகப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பூமிகா கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் காண்பித்தனர். இதன் காரணமாக டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் கசிந்தது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டெல்னா டேவிஸ், 'அன்பே வா தொடரிலிருந்து விடைபெறுவதை நினைக்கும் போது இதயம் உணர்ச்சிகளாலும், நன்றியாலும் நிரம்பி வழிகிறது. இதுவெறும் குட்பை மட்டுமல்ல. உங்கள் அன்பிற்கும் நீங்கள் கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. என் வாழ்வில் ஒரு அத்தியாயமாக அன்பே வா தொடரின் அழகான நினைவுகள் இருக்கும். சைனிங் ஆப் பூமிகா' என்று பதிவிட்டுள்ளார்.