பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் பட சாயலில் வெளிவந்த நடிகர் ரவிச்சந்திரனின் திரைப்படம் | நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் |

விஜய் டிவியின் முக்கிய ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் தனது நகைச்சுவையால் மக்களின் மனதில் கொள்ளை கொண்ட புகழ் படங்களில் நடித்து வந்ததால், சீசன் 3-யில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் புகழ் வரும் புரோமோ சமீபத்தில் வெளியானது.
அதில், கேஜிஎப் ஹீரோ போல் மாஸ் என்ட்ரி கொடுக்கும் புகழ், நேராக சென்று செப் தாமுவின் காலில் மரியாதையாக விழுவது போல் செய்கிறார். இதனை பார்த்த வெங்கடேஷ் பட் புகழை ஓடி வந்து கிண்டலாக எட்டி உதைக்கிறார். பின்னணியிலும் கவுண்டமனியின் கவுண்டருடன் புகழ் கலாய்க்கப்படுகிறார். ஒருபுறம் காமெடியாக மக்கள் மத்தியில் இந்த புரோமோ டிரெண்டாகி வருகிறது.
அதேசமயம், புகழை எட்டி உதைத்ததால் வெங்கடேஷ் பட்டை சிலர் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக ஒளிபரப்பான எபிசோடுகளில் போட்டியாளர்களை வெங்கடேஷ் பட் அடிப்பதாக ஏற்கனவே அவர் மீது பலரும் குற்றச்சாட்டு வைத்தனர். இதற்கு விளக்கம் அளித்த வெங்கடேஷ் பட், போட்டியாளர்களை உண்மையாக அடிக்கவில்லை நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே அப்படி செய்யப்பட்டது என விளக்கமளித்திருந்தார். நடிகை வித்யுலேகாவும், வெங்கடேஷ் பட்டிற்கு ஆதரவு தெரிவித்து 'இது காமெடி நிகழ்ச்சி, நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பாருங்க' என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




