தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

சீரியலுக்காக பிரபல ஹீரோயின் செய்த மிகவும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் படங்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அதற்கேற்றார் போல் சீரியல் எடுப்பவர்களும் காட்சியின் பிரம்மாண்டத்திலும், ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளையும் வைத்து வருகின்றனர். அதிலும் சமீப காலங்களில் சீரியல்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எனவே ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர்களது பங்கும் பெருகி வருகிறது.
அந்த வரிசையில் சீரியல் நடிகை தர்ஷினி கவுடா மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தர்ஷினி கவுடா. அந்த தொடரில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் காட்சிக்காக தர்ஷிணி கவுடா இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தலைகீழாக இறங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் தர்ஷினியின் தைரியத்தை நினைத்து பாராட்டி வருகிறார்கள்.




