ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்துள்ள படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படியான நிலையில், நேற்று முன்தினம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட தலைவி படம் இந்தியா முழுக்க ரூ.1.28 கோடி வசூல் செய்திருக்கிறது. அந்த வகையில் முதல்நாள் வசூல் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. என்றாலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் தலைவியின் வசூல் இதைவிட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.




