நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஜார்ஜ் சம்பந்தப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். இதனால் இருவருக்கும் பிரச்னை என்று கூட செய்தி வந்தது.
சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.
குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் பழைய உடலமைப்புக்கு திரும்பினார். அதைக் காட்டும் வகையில் சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளார். இந்நிலையில் எமி ஜாக்சன் தன்னுடைய பிகினி உடையை காயப்போட்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு. சம்மர் முடிந்து விட்டது அதான் இப்படி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சமூகவலைதள ரசிகர்கள் தங்கள் அருவருப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.