அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் |

இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார் நடிகர் தனுஷ். தற்போது அவர் கைவசம் ‛‛மாறன், நானே வருவேன்'', தெலுங்கில் இரு படங்கள் உள்ளன. இவற்றுடன் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். தனுஷின் 44 படமாக உருவாகும் இப்படத்திற்கான அறிவிப்பு இன்று(ஆக., 4) வெளியிடப்பட்டது. தனுஷ் ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நாளை முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதோடு படத்தின் தலைப்பும் நாளை மாலை 6மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




