நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா டாக்டராக உள்ளார். தொழிலதிபரும், கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதரனின் மகனுமான கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும், இவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் ஆனது. இவர்களது திருமணம் பொள்ளாச்சியில் நடப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (ஜூன் 27) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன், மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் காலை 11.15க்கு ஐஸ்வர்யா கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார் ரோஹித்.
![]() |
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஆகியோரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
![]() |
கொரோனா பெருந்தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
![]() |