ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சித்து பிளஸ் 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவன், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
கொரோனா 2வது அலை காலத்தில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருவதாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசன் விதிமுறைகளை மீறி நடக்கும் படப்பிடிப்புகளை தடை செய்யுங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் விதிமுறைகளை மீறி (அன்அபீசியல்) எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர் முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.