ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஹீரோ வாய்ப்பு குறைந்ததை புரிந்து கொண்ட நடிகர் அர்ஜுன், தனது ரூட்டை மாற்றி வில்லனாக, குணசித்திர நடிகராக, அதேசமயம் கெத்து குறையாமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். தமிழில் இரும்புத்திரை, கொலைகாரன், ஹீரோ ஆகிய படங்களில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையாக நடித்தார். அதேபோல மலையாளத்திலும் அவரை தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
அந்தவகையில் நடிகர் திலீப்புடன் இணைந்து ஜாக் டேனியல் என்கிற படத்தில் நடித்தவர், அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து மரைக்கார் என்கிற வரலாற்று படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் 'விருன்னு' என்கிற மலையாள படத்தில் அர்ஜுனை ஹீரோவாகவே ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம்.. இவர் ஜெயராம் - ரம்யா கிருஷ்ணனை வைத்து 'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த விருன்னு படத்தில் ஆஷா சரத், முகேஷ், ஹரீஷ் பெராடி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.




