தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கடந்த வருடம் இதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தாக்கம் பரவியபோது, பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த செலவில் பல விதமான உதவிகளை செய்தவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதன்மூலம் ரியல் ஹீரோ என மக்களிடம் பெயர் பெற்ற சோனு சூட், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான போன் அழைப்புகளும் சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளும் வருகிறதாம். அதேசமயம் இந்தமுறை நாடு முழுதும் உள்ள மக்கள் அனைவரும் உதவிக்கு அழைக்கும் விதமாக ஒரு டோல் ப்ரீ நம்பரை ஏற்படுத்தி, ஒரு சிஸ்டம் மூலம் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சோனு சூட். இதன்மூலம் எங்கெங்கே ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் அதிகம் கிடைக்கின்றன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தெரிவித்து உதவி செய்வதுதான் அவரது புதிய திட்டமாம்.