துரந்தர் படம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் : ஆதித்யா தர் | அரசன் படத்தில் இணைந்த விக்ராந்த் | ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள் : ரவி மோகன் பதிவு வைரல் | ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா? | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா |

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு டைட்டில் வைக்கப்படாமலேயே முடிவடைந்தது. இது புரமோத் பிலிம்சின் 25வது படமாகும். ஷ்ருதி நல்லப்பா தயாரிப்பாளர்.
படம் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறியதாவது : இந்த பொது முடக்க காலத்தில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பு பணிகளை துவங்க தயங்கி நின்றபோது, துணிவாக களமிறங்கி மிகச்சிறந்த திட்டமிடலுன் இப்படத்தினை உருவாக்கினோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படம் ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக இருக்கும் . என்றார்.