குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குராணா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது..
அந்தவகையில் தெலுங்கில் நிதின், மலையாளத்தில் பிரித்விராஜ் ஆகியோர் நடிக்க, தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் இந்தப்படம் உருவாகிறது. இந்தப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் ஒரிஜினலில் தபு நடித்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். மற்றும் பிரியா ஆனந்த், கார்த்திக் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் நடிகர் சமுத்திரக்கனியும் இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.