தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

கொரோனாவின் அடுத்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அது போல அறிவிப்பு வரலாம் என்ற சந்தேகம் தயாரிப்பாளர்களிடம் வந்துள்ளது.
தமிழில் நேற்று வெளியான 'சுல்தான்' படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. அங்கும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அடுத்த வாரம் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படம் வெளியாக உள்ளது. ஆனால், மக்களிடையே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் லாக்டவுன் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் டென்ஷன் ஆகியுள்ளனர்.
மேலும், 'கர்ணன்' படத்தை தென்னிந்திய மாநிலங்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருவேளை 50 சதவீத இருக்கைகள் என்றால் அது படத்தின் வசூலை பாதிக்கலாம். அதோடு அதற்கடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட முடியாத நிலையும் ஏற்படலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் டென்ஷன் போக வேண்டுமென்றால் லாக்டவுன் வராமல் இருக்க வேண்டும். இருந்தாலும் அதைப் பற்றி அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.