தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் | ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம் | 100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45 |

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்கள் என்பது ஊரறறிந்த செய்தி. ஆனால், அவர்கள இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலர் அறியாத செய்தி.
இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை அடிக்கடி பொறாமைப்பட வைத்து வந்தார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனப் பலர் கேட்பது வழக்கம்.
இன்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் மூலம் அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில், “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டு ஹாட்டின் ஸ்மைலிகளையும் சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன் அதற்கான புகைப்படத்தில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தைத்தான் பதிவிட்டுள்ளார்.
ஒன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம், அல்லது விரைவில் நடக்கலாம். எப்படியோ விரைவில் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.