சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் |

நேற்றைய தினம் 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் இனிமேல் தான் ரிலீஸாக இருக்கிறது. இந்த விருது அறிவிப்பினால் மற்ற யாரையும் விட இந்தப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
காரணம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு என மேலும் இரண்டு விருதுகள் இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளன. இதில் இந்தப்படத்திற்கான விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை செய்திருப்பவர் சாட்சாத் பிரியதர்ஷனின் மகன் சித்தார்த் தான். ஆம்.. அமெரிக்கா சென்று விஎப்எக்ஸ் படிப்பை முடித்துவிட்டு வந்த சித்தார்த், நேரடியாக தனது தந்தை இயக்கி வந்த 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் விஎஃப்எஸ் சூப்பர்வைசராக பணியாற்றினார். முதல்படமே வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் என்பதால் மிகவும் நேர்த்தியாக தனது வேலையை செய்துள்ளார் சித்தார்த்
கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகள் பட்டியலில் இந்தப்படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்காக சித்தார்த்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது பணிக்கு மேலும் கௌரவம் செய்யும் விதமாக, தற்போது தேசிய விருதும் கிடைத்துள்ளது. இதனால் தனது மகன் குறித்து பெருமிதமும் சந்தோஷமும் அடைந்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.