ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய ராம்சேவா, தற்போது எழுதி, இயக்கும் படம் அச்சம் தவிர்த்திடு. ஸ்ரீபிரபு, ஹேமா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். சிவபாஸ்கரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். அருள்தேவ் இசையமைக்கிறார். ஸ்ரீவலம்புரி விநாயக மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குனர் கூறுகையில், "இந்தப்படம் முழுக்க காதலை வேறு கோணத்தில் அணுகியிருக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும். அசல் வாழ்க்கையை விட்டு கொஞ்சமும் விலகாமல் இந்தப்படத்தை எடுக்கிறேன். கதை ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். காதல், அன்பு, கலாட்டா, துரோகம் எல்லாமும் இந்த கதையில் இருக்கும். படப்பிடிப்புக்கு முன்பே, ஒரு முன்னோட்ட வீடியோவை படமாக்கியிருக்கிறோம். அடுத்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றார் ராம்சேவா.