‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நடிகர் திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து ஏராளமான நடிகர்கள் வந்திருக்கிறார்கள். சிவாஜிக்கு பிறகு அவரது மகன் பிரபு நடிகராகவும், ராம்குமார் தயாரிப்பாளராகவும் வளர்ந்தார்கள். ராம்குமார் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ராம்குமார் மகன் துஷ்யந்த், பிரபு மகன் விக்ரம் பிரபு ஆகியோரும் நடிகர் ஆனார்கள். இதில் பின்னாளில் விக்ரம் பிரபு நடிகராகவும், துஷ்யந்த் தயாரிப்பாளராகவும் வளர்ந்தார்கள்.
தற்போது ராம்குமாரின் மகனும், துஷ்யந்தின் தம்பியுமான தர்ஷன் சினிமாவுக்கு வருகிறார். வெளிநாட்டில் பட்டப்பிடிப்பும், சினிமா தொடர்பான படிப்பும் படித்துள்ள தர்ஷன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார். இங்கு சில விளம்பர படங்களில் நடித்தார். சபா நாடகம், தெருகூத்து, வீதி நாடக குழு, நாட்டுபுற நாடகம், தனி நடிப்பு மற்றும் சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார். இப்போது சினிமாவில் நடிக்க வருகிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.




