லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அவரது மனைவியாக ஐஸ்வர்யாராய், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடந்தது. பின்னர் புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வனில் நடிப்பதற்காக கொரோனா காலத்தில் த்ரிஷா வாள் சண்டை பயிற்சியும், குதிரையேற்ற பயிற்சியும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.