2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
'கேஜிஎப் சேப்டர் 2' என்ற கன்னடப் படத்தின் டீசரில் மிஷின் கன்னை வைத்து 'கடகடகட' என சுட்டுத் தள்ளி, அதனால் நெருப்புப் பிழம்பான அந்த 'கன்'னில் சிகரெட்டைப் பற்ற வைக்கும் 'ராக்கி' ஒரு பக்கம் 3 கோடி பார்வைகளை, 3 கோடி லைக்குகள் என புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு பக்கம் தமிழ் 'ராக்கி' டீசரில், சேரில் கட்டப்பட்டுள்ள ஒருவனின் தலையை 'கரகரகர' என கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தள்ளுகிறார் இன்னொரு ராக்கி.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ராக்கிகளும் வன்முறையின் உச்சகட்டம் எப்படி இருக்கும் என நம்மை பயமுறுத்துகிறார்கள். 'கேஜிஎப்' ராக்கியாவது பரவாயில்லை, மிஷின் கன்னால் நான்கைந்து கார்களை சுட்டுத் தள்ளுகிறார். ஆனால், 'ராக்கி'யின் ராக்கி கொடூரமாகக் கழுத்தை அறுப்பது எல்லாம் டீசரில் பார்க்கும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கும் எனத் தெரியவில்லை.
இந்தக் கொடூரமான தமிழ் 'ராக்கி' படத்தைத்தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி இணைந்து வழங்க உள்ளது. கன்னட 'ராக்கி' 3 கோடி பார்வைகளை நெருங்கிச் செல்ல, இந்த தமிழ் 'ராக்கி' 2 லட்சம் பார்வைகளை மட்டுமே தாண்டியுள்ளார்.