டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தியேட்டர்களில் பெரிய வெளியீடாக விஜய், விஜய்சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்', சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளங்களிலும் பொங்கல் வெளியீடாக புதிய படங்கள் வெளியாக இருக்கின்றன. ஜெயம் ரவி நடித்துள்ள 'பூமி', மாதவன் நடித்துள்ள 'மாறா' ஆகிய படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
அமேசான் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் டிரைலர்கள் அந்தப் படங்களின் நடிகர்கள், நடிகைகளின் முந்தைய பட சாதனைகளை முறியடித்து வருகின்றன. 'பொன்மகள் வந்தாள், பெண்குயின், சூரரைப் போற்று' ஆகிய படங்களின் டிரைலர்கள் அதற்கு உதாரணங்கள். இப்போது அந்த வரிசையில் 'மாறா' படமும் இடம் பிடித்துள்ளது. இந்த டிரைலர் யு டியுபில் ஒன்றரை கோடி பார்வைகளைக் கடந்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதே சமயம், ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ள 'பூமி' படத்தின் டிரைலர் 'மாறா' டிரைலரின் பார்வையில் பாதியான 70 லட்சம் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. 'பூமி' டிரைலரின் பார்வையை இரு மடங்காக 'மாறா' முறியடித்துள்ளது.
யு டியூபில் டிரைலர்களில் அதிக பார்வைகளைப் பெற 'என்னவெல்லாம்' செய்ய வேண்டுமோ அதை அனைவரும் செய்கிறார்கள் என டிஜிட்டல் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தாங்கள் வெளியிடும் படங்களை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை இந்த ஓடிடி நிறுவனங்கள் வெளியிட மறுப்பதன் ரகசியம் இப்போது புரிகிறதா ?.




