டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ராஜமவுலி இயக்கத்தில் 2015ல் வெளிவந்த 'பாகுபலி 1, 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பாகங்களையும் இணைத்து, நேரத்தைச் சுருக்கி 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியிட்டார்கள்.
அப்படம் முதல் வார இறுதியில் சுமார் 40 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ரிரிலீஸ் படத்திற்கான வசூல் என்று பார்த்தால் இது அதிகம்தான். இருந்தாலும் இந்த வாரத்தையும் சேர்த்து இந்தப் படம் 100 கோடி வசூலைத் தொடுமா என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், இந்த வாரம் தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'த கேர்ள்பிரண்ட்' உள்ளிட்ட நான்கு புதிய படங்கள் வெளியாக உள்ளன. புதிய படங்களை ரசிகர்கள் பார்க்க விரும்பினாலும், 'பாகுபலி தி எபிக்' படத்தின் வசூலும் இந்த வார இறுதி வரையிலும் குறிப்பிடும்படி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் 50 அல்லது 60 கோடி வசூலைக் கடந்தால் அதுவே ஒரு சாதனைதான்.