டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகனாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞரான இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து ஏமாற்றி திருமண மோசடி செய்துவிட்டதாகவும், அவரால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தார் ஜாய் கிரிசில்டா. ஆனால் இவரின் குற்றச்சாட்டை மறுத்து வந்த ரங்கராஜ், இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறியிருந்தார்.
சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் ரங்கராஜ் தன் மனைவி உடன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேப்போல் ஜாய் கிரிசில்டாவும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தச்சூழலில் கடந்தவாரம் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை ரங்கராஜ் போன்றே இருப்பதாகவும், ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் பிறந்து இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீஸிற்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே ஜாய் கிரிசில்டா வெளியிட்ட பதிவில், ‛‛மகளிர் ஆணையம் முன்பு நடந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தன்னுடையது தான் என ஒப்புக் கொண்டதாகவும்'' குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.