தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

இந்த வாரத்தில் ஓடிடி தளத்தில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தலைவன் தலைவி
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில், இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'தலைவன் தலைவி'. குடும்ப பிரச்னைகளை தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் நடிகர்களில் தேர்வான நடிப்பு ஆகியவற்றால் மக்களை வெகுவாக கவர்ந்தது. திரையரங்குகள் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம், நாளை(ஆக.22ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மாரீசன்
நடிகர் வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'மாரீசன்'. சுதீர் சங்கர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். கலவையான விமர்சனத்தைப் பெற்ற இந்த திரைப்படம் கடந்த ஜூலை 25ம் தேதி திரையரங்கில் வெளியானது. நாளை(ஆக.22ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஹரிஹர வீர மல்லு
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து, தெலுங்கு ரசிகர்கள் மட்டும் அல்லாமல், அனைத்து மொழி ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'ஹரிஹர வீர மல்லு'. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்த திரைப்படம், வெளியாகி போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படம் நேற்று(ஆக.20ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
சூத்ரவாக்கியம்(Soothravakyam)
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இயல்பான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சூத்ரவாக்கியம்'. திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், ஜூலை மாதம் திரையரங்கில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் இன்று(ஆக.21ம் தேதி) லைன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அமர் பாஸ்
ராக்கி குல்சார், சிபோ பிரசாத் முகர்ஜி நடிப்பில் குடும்ப பின்னணி கொண்ட கதையுடன் மே மாதம் வெளிவந்த இந்த திரைப்படம் நாளை (ஆக.22ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வெல்கம் டூ சடன் டெத்
மைக்கல் ஜெய் வொயிட் நடிப்பில் வெளிவந்த அதிரடி திரைப்படமான ' வெல்கம் டூ சடன் டெத்' இன்று(ஆக.21ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.




