சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வெளியான படம் தக்லைப். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என்று கமல் பேசிய விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது. அதோடு கர்நாடகாவில் தக்லைப் படத்தை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காத கமல், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது கமல் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு தடை போட முடியாது. அதனால் கர்நாடகாவில் தக்லைப் படம் வெளியாகும்போது அங்குள்ள மாநில அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். ஆனபோதிலும் இந்த தக்லைப் படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை வாங்கிய வி.ஆர்.பிலிம்ஸ் அரவிந்த் என்பவர், தக்லைப் படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றமே அனுமதி கொடுத்தாலும் நாங்கள் ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
அதுவும் இப்போது இந்த படத்தை ரிலீஸ் செய்தால் சுத்தமாக ஓடாது என்று கூறியுள்ள அரவிந்த், கமலின் பேச்சினால் கர்நாடகாவில் திட்டமிட்டபடி தக்லைப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததை அடுத்து, ராஜ்கமல் பிலிம்ஸ் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் உச்சநீதிமன்றமே உத்தரவு போட்ட போதும் கர்நாடகாவில் தக்லைப் படத்தை திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.