ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் அர்ஜுன் ஜோடியாக சாது படத்தில் நடித்து அறிமுகமானார். 2001ல் கமல்ஹாசனின் ‛ஆளவந்தான்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தமிழில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட்டில் அதிகம் நடித்தார். அவ்வப்போது ஓரிரு தென்னிந்திய படங்களில் நடித்தார். 2022ல் பான் இந்தியா படமாக வெளியான கன்னட படமான கேஜிஎப்., 2வில் பிரதமர் வேடத்தில் நடித்து மீண்டும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பின் ரவீனா தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். ‛ஜென்டில்வுமன்' படத்தை இயக்கிய ஜோஷுவா சேதுராமன், ‛லாயர்' என்ற படத்தை இயக்குகிறார். நீதிமன்றம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக வக்கீல் வேடத்தில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்தில் தான் ரவீனாவும் வக்கீலாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் அவரின் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுனில் துவங்குகிறது.




