மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தசமயம் பல பிரபலங்களும் தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு எதிராக கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் பாகிஸ்தானில் வாழும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது அறிக்கை விமர்சிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானில் 50 லட்சம் இந்தியர்கள் வாழ்வதாக அவர் தெரிவித்திருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு என்று குறிப்பிட்டு, ‛‛காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும் நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்'' என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.




