தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
அட்லர் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம் 'சொட்ட சொட்ட நனையுது'. தலைப்பை பார்த்து காதல் படம் என்று நினைக்க வேண்டாம். இது சொட்டை தலையர்களை மையமாக கொண்ட காமெடி படம். மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் பரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார், ரயீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நிஷாந்த் கூறும்போது "இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது" என்றார்.