எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை |

தனுஷ் இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் படம் 'இட்லி கடை'. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்று முன்னர் அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்தத் தேதியில் படம் வராது, தள்ளிப் போகும் என தகவல்கள் வெளிவந்தன. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததே இதற்குக் காரணம்.
ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இதுவரையில் தள்ளி வைப்பு பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம், படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் மட்டுமே படம் தள்ளிப் போவதைப் பற்றிப் பேசியிருந்தார்.
இதனிடையே, புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஜுன் மாதம் படம் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.