என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
சிவாஜிராவ் கெய்க்வாட் என்றிருந்த ஒரு சாதாரண திரைப்படக் கல்லூரி மாணவர், பின்னாளில் ரஜினிகாந்த்தாக நாமகரணம் சூட்டப்பட்டு, சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்ந்து, ஒரு உச்ச நடிகராக உயர காரணமாயிருந்தவர் அவரது குருநாதரான இயக்குநர் கே பாலசந்தர். அவரது இயக்கத்திலும், தயாரிப்பிலும் பல படங்களில் நடித்திருக்கின்றார் ரஜினி. அவற்றில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படம்தான் “தப்புத்தாளங்கள்”.
கன்னடம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகி, 1978ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்து, கன்னடத்தில் வெற்றியை சுவைத்து, தமிழில் தோல்வியைத் தழுவியது இத்திரைப்படம். “தப்புத்தாளங்கள்” என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, அதுவரை கே பாலசந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இத்திரைப்படத்தில் மிஸ்ஸானார்.
இசையமைப்பாளர் விஜயபாஸ்கரை பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் கே பாலசந்தர். “என்னடா பொல்லாத வாழ்க்கை”, “தப்புத்தாளங்கள் வழி தவறிய பாதங்கள்”, “அழகான இளமங்கை” போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களால் தப்பாத தாளத்தை வழங்கி, “தப்புத்தாளங்கள்” திரைப்படத்திற்கு நிறைவான இசையை தர இசையமைப்பாளர் விஜயபாஸ்கரும் தவறவில்லை.
படத்தில் 'தேவு' என்ற ரவுடி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த ரஜினிகாந்த், தனது தேர்ந்த நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கே உயிர் தந்திருப்பார். ரஜினி சினிமாவிற்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தபோது, ஒரு பெண்ணை அவர் கேலி செய்ய, அந்தப் பெண்ணின் சகோதரர்கள், பெங்களுரில் குட்டள்ளி என்ற பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த நாராயணன் என்பவனை அழைத்துக் கொண்டு ரஜினியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
ரஜினி வீட்டில் இல்லாதபோது அவரது சின்ன அண்ணனை அடித்துவிட்டுப் போக, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரஜினி, விபரம் அறிந்து ஆத்திரத்தோடு சைக்கிள் செயினை கையில் எடுத்துக் கொண்டு ஆவேசமாக ரவுடி நாராயணன் இருக்கும் குட்டள்ளி பகுதிக்குச் சென்று, “டேய் நாராயணா… டேய் நாராயணா…” என்று கூச்சலிட்டுக் கொண்டே செல்ல, அங்கே ஒரு டீக்கடையில் சவடாலாகப் பேசிக் கொண்டிருந்த நாராயணனை நோக்கிப் பாய்ந்த ரஜினிகாந்த், அவனை ஓட ஓட விரட்டி அடிக்க, அதுவரை பேட்டை ரவுடியாகவும், பிஸ்தாவாகவும் இருந்து வந்த நாராயணனை துரத்தித் துரத்தி அடித்த ரஜினி அன்றிலிருந்து அந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய மரியாதையே ஏற்பட்டதாம். அந்த ரவுடி நாராயணனின் நடையுடைகளைப் பின்பற்றித்தான் “தப்புத்தாளங்கள்” திரைப்படத்தில், தான் ஏற்று நடித்திருந்த அந்த ரவுடி கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தாராம் நடிகர் ரஜினிகாந்த்.