நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் மாதவன் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ‛டெஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான 'ராக்கெட்டரி' எனும் படத்தில் அவரது வேடத்தில் நடித்ததோடு அந்த படத்தையும் இயக்கி இருந்தார்.
இதையடுத்து மீண்டுமொரு விஞ்ஞானி படத்தில் மாதவன் நடிக்கிறார். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கியவர், இந்தியாவின் எடிசன் என அழைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி, நடிக்கிறார். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் சூரரைப்போற்று, ராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.