டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

பிம்பிசாரா பட இயக்குனர் மலிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக 'விஷ்வாம்பரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர் அல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக ஐதராபாத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த இந்த படத்தின் டீசர் இன்று(அக்., 12) விஜய தசமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தான் அதிகமாக உள்ளன. தீய சக்திக்கும், நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் விஷயம் தான் படம். பறக்கும் குதிரையான யுனிகார்னில் பறந்து வந்து எதிரகிளை பந்தாடுவது போன்று இந்த முன்னோட்ட டீசர் உள்ளது.