விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் ஜெயிலர். 600 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு கூலி படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும் ரஜினி, அதையடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற பிறமொழி சினிமா பிரபலங்கள் நடித்த நிலையில் ஜெயிலர்- 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.